search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோல்கேட் ஊழியர்"

    கப்பலூர் அருகே குடிபோதையில் டோல்கேட் ஊழியர்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து 3 பேரை கைது செய்த போலீசார் ராணுவ வீரர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர், காந்திநகரைச் சேர்ந்தவர் காசி மகன் விக்னேஷ் (வயது 23). ராணுவ வீரரான இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை விக்னேஷ் தனது நண்பர்கள் சரத் (28), கார்த்திக் (28) ஆகியோருடன் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் 3 பேரும் போதையில் கப்பலூர் டோல்கேட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் பணியில் இருந்த ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

    இது குறித்து டோல்கேட் பொறுப்பாளர் சங்கர், திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விக்னேஷ் உள்பட 3 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் ஆகியோருடன் கப்பலூரில் தங்கியிருக்கும் டோல்கேட் ஊழியர்களின் வீட்டுக்கு நேற்றிரவு சென்றனர்.

    அங்கிருந்த ஊழியர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தாருண் போஸ், ஒரிசாவைச் சேர்ந்த சஞ்சய் ஆகியோருடன் தகராறு செய்தனர்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து 2 ஊழியர்களையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ராஜா, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். ராணுவ வீரர் விக்னேஷ், சரத் ஆகியோரை தேடி வருகின்றனர். #tamilnews
    ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் டோல்கேட் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னைபாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு பகுதிகளான கோவளம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் டோல்கேட் அமைத்து வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 54 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு கழிப்பிடம், ஓய்விடம், சுத்திகரிப்பு குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன் குறைந்த சம்பளமும் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.

    இந்த நிலையில் ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி நேற்று பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் டோல்கேட் பகுதி ஊழியர்கள் கட்டண ரசீது போட மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் உத்தண்டியில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.#tamilnews
    ×